3 22
இலங்கைசெய்திகள்

தேசிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் : அமைச்சர் விஜித ஹேரத் அதிரடி அறிவிப்பு

Share

தேசிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் : அமைச்சர் விஜித ஹேரத் அதிரடி அறிவிப்பு

வியாழன் அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை வெல்லும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஆனால் தேசிய ஐக்கியத்தை அடைவதற்காக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை வெல்வதில் தேசிய மக்கள் சக்தி ‘மிகவும் நம்பிக்கையுடன்’ இருப்பதாகவும் ஆனால் அரசியல் சூழலை வலுப்படுத்துவதற்காக தமிழ்,மற்றும் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க தமது கட்சி தயாராக இருப்பதாக ஹேரத் கூறினார்.

எவ்வாறாயினும், தேசிய ஐக்கிய அரசாங்கத்திற்கான இந்த அழைப்பு இந்த சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படும், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு (UNP) அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...