25 68385df7d5983 1
இலங்கைசெய்திகள்

கட்சியின் மீது குற்றம் சுமத்தும் தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை வேட்பாளர்கள்

Share

பருத்தித்துறை பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வேட்பாளர்கள் சிலர் கட்சி தமக்கு அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் இன்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

“மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நாங்கள் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டோம்.

தேர்தலுக்கு முன்பு யாழ்ப்பாணத்திற்கு எங்களை அழைத்த கட்சி தலைமைகள், தேர்தலுக்கு பின்னர் ஆசனங்களை பிரித்துக் கொடுப்பது தொடர்பில் அனைவருடனும் கலந்துரையாடியே இறுதி முடிவு எடுப்போம் என வாக்குறுதி தந்து வட்டாரங்களில் அதிக வாக்குகளை பெற தீவிரமாக செயற்படுமாறு கூறி எங்களை அனுப்பிவைத்தனர்.

ஆனால், தேர்தல் முடிவுற்றதன் பின் வேட்பாளர்கள் எங்களுடன் கலந்துரையாடாமல் வடமராட்சி கிழக்கு இணைப்பாளர் தன்னையும், இன்னொருவரையும் போணஷ் ஆசனத்திற்காக தெரிவு செய்து ஏனைய வேட்பாளர்களிற்கு கொடுத்த வாக்குறுதியில் இருந்து மீறியுள்ளனர் தெரிவு செய்யப்பட்ட இருவரும் சொற்ப வாக்குகளையே பெற்றனர்.

ஆனால், இங்கிருக்கும் நாம் இவர்களை விட அதிக வாக்குகளை பெற்றோம். அவ்வாறு இருந்தும் எங்களுடன் கலந்துரையாடி ஆளுமையானவர்களுக்கு கொடுக்காமல் ஒரு திறமையற்ற, ஊழலுக்கு துணைபோவதாக குற்றச்சாட்டு காணப்படும் இணைப்பாளருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

போணஷ் ஆசனத்திற்கான இரண்டு பேரை தெரிவு செய்யும் பொறுப்பு வடமராட்சி கிழக்கு இணைப்பாளரிடம் கொடுக்கப்பட்டவேளை அவர் சக வேட்பாளர்களின் தொலைபேசி இலக்கங்களை தடை செய்து விட்டு, அழைப்புகளுக்கு பதில் அளிக்காமல் தன்னுடன் இன்னொருவரின் பெயரையும் பதிவு செய்து அனுப்பியுள்ளார்.

யாராக இருந்தாலும் தகுதியானவரை, அதிக வாக்குகள் கிடைக்கப்பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை தெரிவு செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்றை ஒழுங்குபடுத்துமாறு கோரியும் அமைப்பாளர் அதனை மறுத்து தன்னிச்சையாக தன்னுடன் இன்னொருவரை தெரிவு செய்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பு எங்களை தேடி வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், உட்பட அமைச்சர் யாரும் இந்த விடயத்தில் இதுவரை மெளனமாக இருக்கின்றனர்.

வடமராட்சி கிழக்கினுடைய தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களாகிய நாம் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

உங்களை நம்பித்தான் நாங்கள் எங்கள் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து வாக்குக் கேட்டோம் இன்று அவர்கள் எங்களை பார்த்து கேள்வி கேட்கின்றனர் எமது பிரதேசத்தில் அதிக பிரச்சினைகள் காணப்படுகின்றன.

அவ்வாறு இருக்கையில் மக்கள் எமக்கு அதிக வாக்கு செலுத்தினார்கள். ஆனால் எம்மை விட சொற்ப வாக்குகள் பெற்ற உறுப்பினர்களுக்கு போணஷ் ஆசனம் வழங்கப்படும் போது மக்கள் எங்களுடன் முரன்படுகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் என்ன பதில் கூற?

எமது நிலைப்பாட்டை கூறி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பிவைத்தோம். எந்தவித பதிலும் இல்லை.

வேட்பாளர்கள் நாங்கள் யாழில் கட்சியின் அதிகாரிகளை சந்தித்து நியாயம் கோரிய போது கட்சி எடுப்பதுதான் முடிவெற கூறி எங்களை அனுப்பி வைத்துவிட்டார்கள். நாங்கள் பதவிக்காக ஆசைப்பட்டவர்கள் அல்ல. ஆனால், நீதியின்படி நேர்மையின் படி நடந்து கொள்ள வேண்டியது எமது கட்சியின் பொறுப்பல்லவா?

எமது சொந்த பணத்தை அதிகமாக செலவழித்தே தேர்தலில் கட்சிக்காக பாடுபட்டோம். ஆனால் இறுதியில் கட்சியின் முடிவே இறுதி முடிவென கூறி எம்மை ஏமாற்றி விட்டார்கள்.

வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் அமைப்பாளர் பதவிக்கு பொருத்தமற்றவர் அவருடன் பயணித்த நாட்களில் அவரால் கட்சிக்கு அவப்பெயரே ஏற்படுமென அறிந்து கொண்டோம். இணைப்பாளர் சக வேட்பாளர்களின் உரிமைகளை பறித்து தான் எடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஏனைய வேட்பாளர்களினதும் எமக்கு வாக்களித்த மக்களின் விருப்பங்களை கருத்தில் கொண்டு நீதியான நேர்மையான ஒரு முடிவை எமக்கு வழங்க வேண்டும்.

அவ்வாறு நீதியை வழங்காமல் எம்மை தேவைக்காக பயன்படுத்தினீர்கள் என்பதனை நன்கு உணர்ந்தவர்களாக நாம் அனைவரும் கட்சியை விட்டு வெளியேறுவோம்” எனக் கூறியுள்ளனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...