இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய கல்வித் தகைமை விவகாரம் – பதிலடி கொடுத்த சபாநாயகர்

Share
11 6
Share

சர்ச்சைக்குரிய கல்வித் தகைமை விவகாரம் – பதிலடி கொடுத்த சபாநாயகர்

தமது கல்வித் தகமை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என சபாநாயகர் அசோக ரன்வல (Ashoka Ranwala) தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அசோக ரன்வல பட்டப்படிப்பை முடித்திருந்தால் நிரூபிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) மற்றும் சமூக மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி சவால் விடுத்திருந்தனர்.

சபாநாயகரின் பட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்ற நிலையில் அசோக ரன்வல இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும் ஜப்பானில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

தமக்கும் கட்சிக்கும் அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு பிரசாரம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு தற்பொழுது பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகர் அசோக ரன்வல தனது பட்டப்படிப்பை முடித்திருந்தால் அதனை நிரூபிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய முகநூல் பக்க பதிவொன்றின் மூலம் நேற்று சவால் விடுத்திருந்தார்.

அத்துடன் அவ்வாறு செய்யத் தவறினால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்றும் சபாநாயகர் குறித்த விடயத்திற்கு பதிலளிக்கத் தவறினால் தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...