4 21
இலங்கைசெய்திகள்

அநுர அரசு மக்களை ஏமாற்றுகிறது! மொட்டுவின் உறுப்பினர் பகிரங்கம்

Share

அநுர அரசு மக்களை ஏமாற்றுகிறது! மொட்டுவின் உறுப்பினர் பகிரங்கம்

போலியான வாக்குறுதிகளை வழங்கியே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,“ போலியான கல்வித் தகைமையை சமர்ப்பித்து, சபாநாயகராக பதவி வகித்ததன் பின்னர் உண்மை வெளிவந்ததை தொடர்ந்து ஏற்பட்ட கடும் சர்ச்சையால் சபாநாயகர் பதவி விலகினார்.

நாடாளுமன்றத்தின் கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வலவுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை என்னவென்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை முகத்தை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்வார்கள். அவர்கள் குறிப்பிட்ட விடயங்கள் அவர்களுக்கே எதிரானதாக அமையும்.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முறையாக நிறைவேற்ற வேண்டும்.

நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

அதேநேரம் அரசாங்கத்தின் தவறை சுட்டிக்காட்டும் பலமிக்க எதிர்க்கட்சியாக நாங்கள் செயற்படுவோம்.

எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடும் பிரதான அரசியல் கட்சியாக மீண்டும் எழுச்சி பெறுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Valikamam Land Release
இலங்கை

காணிவிடுவிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர்...

Colombo Hotel
இலங்கை

பட்டப்பகலில் நடத்தப்பட்ட கைவரிசை – போலி ஆசாமி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்!

கடந்த 3 ஆம் திகதி, கொழும்பு – கம்பெனி வீதி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு...

Cid Investigations 1
இலங்கை

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம் – தலையிடுகிறதா CID!

அண்மைய நாட்களாக மிகப்பெரிய அளவிலான பேசுபொருளாக காணப்பட்ட கல்முனை ஆதார வைத்தியசாலை முஸ்லிம் பெண்களினுடைய ஆடை...

எஃப்.யூ. வூட்லர்
இலங்கை

வாகன சாரதிகளுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை!

மோட்டார் வாகன சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களினாலும் வாகனங்களினை அலட்சியமாக நிறுத்திச் செல்வதால், அவை...