அரசாங்கம் குரோத உணர்வுடன் செயற்பட்டு வருவதாக முன்னாள் ராஜாங்க அமைச்சரும் சர்வஜன பலய கட்சியின் உப தலைவருமான கலாநிதி சன்ன ஜயசுமன குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குரோதம், துவேசம், பழிவாங்கல், பலவந்தம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை மிகவும் முதன்மையானது என பௌத்த மத சிந்தனைகளில் கூறப்பட்டுள்ள நிலையில், நம்ப முடியாத ஓர் தரப்பிடம் நாடு ஒப்படைக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
76 ஆண்டு கால சாபம் பற்றி பேசி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் புதிய வேலைகளை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. எனினும் நாட்டை பின்னோக்கி நகர்த்தி விடக் கூடாது என மக்கள் கருதுகின்றார்கள் என சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.