அரசாங்கம் உலக சாதனை படைத்துள்ளது:ரில்வின் சில்வா

23

அரசாங்கம் உலக சாதனை படைத்துள்ளது:ரில்வின் சில்வா

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் உலக சாதனை படைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் உரையாற்றிய போது ரில்வின் சில்வா இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகச்சிறிய அமைச்சரவையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுவி ஆட்சி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இது ஓர் உலக சாதனை எனவும் மூன்று அமைச்சர்களினால் நாடு ஆட்சி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால அரசாங்கங்கள் நாட்டை ஆட்சி செய்வதற்காக 50 – 60 அமைச்சர்களை நியமித்ததாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version