sanakkiyan
இலங்கைசெய்திகள்

“பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மதுபான உரிமத்தை விற்க முயற்சி”: நாடாளுமன்றத்தில் இரா. சாணக்கியன் குற்றச்சாட்டு!

Share

அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவும் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து களுத்துறை மாவட்டத்திலுள்ள ஒரு பீர் தயாரிப்புக்கான உரிமத்தை விற்பனை செய்வதற்கு முயற்சித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (அக்டோபர் 22) உரையாற்றும் போதே சாணக்கியன் இந்தக் குற்றச்சாட்டைக் குறிப்பிட்டுள்ளார்.

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான வரி உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொன்னி சம்பா அரிசி தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய அரிசியை இறக்குமதி செய்ய வரிவிதிப்புக்கள் பற்றி கவனம் செலுத்தப்படவில்லை. இது மக்களுக்கு நியாயமான விலையில் அரிசி கிடைக்க வாய்ப்பு அளித்தாலும், அடுத்த போகத்திற்கான நெல் அறுவடை மேற்கொள்ளும்போது நெல்லின் விலை கணிசமான அளவு குறைந்து, விவசாயிகள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும்.

மதுவரித் திணைக்களம், எதனோல் உற்பத்தி செய்வோருக்கு வரி செலுத்த கால அவகாசம் வழங்கியதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மாதத்திற்குள் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது (முன்பு 6 மாதங்கள்).

“தேர்தல் இலஞ்சமாக” Bar Permit அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக அரசாங்கத்தால் கூறப்பட்டு, பெயர்ப்பட்டியலும் வாசிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

கிளிநொச்சி மாவட்டத்தில் 5,000 வாக்காளர்களுக்கு 1 Bar என்ற ரீதியில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஒருபுறம் வரி அதிகரிக்க வேண்டும் என்று கூறும் அரசாங்கம், மறுபுறம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டோரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவும், வேறொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து களுத்துறை மாவட்டத்திலுள்ள ஒரு கூட்டுறவுக்குச் சொந்தமான Bruery License ஒன்றினை விற்பனை செய்வதற்கு முயற்சித்துள்ளனர்.

இவ்வாறு பல முக்கிய விவகாரங்களை நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எடுத்துரைத்தார்.

Share
தொடர்புடையது
25 68fa2cc1432fd
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

முன்மொழியப்பட்ட தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வரைவு எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி...

download 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் 1947 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன: ஆயுதக் கடத்தலுக்கு இராணுவ முகாம் தொடர்பை அமைச்சர் உறுதிப்படுத்தினார்!

இலங்கையில் திட்டமிட்ட குற்றக்குழு நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், இந்த ஆண்டில்...

1716805478 namal 2
செய்திகள்இலங்கை

“பெகோ சமன் தொலைபேசியில் ‘நாமல் சேர்’ யார்?”: தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க கேள்வி!

பாதாள உலகக் குற்றவாளியான பெகோ சமனின் தொலைபேசியில் ‘நாமல் சேர், மகே சேர் ராஜபக்ச’ என்று...

images 4 2
செய்திகள்இலங்கை

வடக்கு-கிழக்கில் 700 ஏக்கர் நிலங்கள் பொதுமக்களிடம் ஒப்படைப்பு: பாதுகாப்புத் துணை அமைச்சர் தகவல்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பொதுமக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப்...