ஒரே இரவில் பொருளாதாரத்தில் மாற்றம்: அனுர தரப்பு
தேசிய மக்கள் சக்தி ஆட்சி (NPP) அதிகாரத்தை பெற்றாலும் பொருளாதாரத்தை ஒரே இரவில் மாற்ற முடியாது என கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி ( Sunil Handunnetti)தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை அளிக்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பொருளாதாரத்தை மாற்றுவதற்கு தமது அரசாங்கத்திற்கு நியாயமான கால அவகாசம் தேவைப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அரசியலை மாற்ற இருபத்தி நான்கு மணி நேரம் மட்டுமே போதுமானது என்றும அவர் தெரிவத்துள்ளார்.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவிக்கு முன்மொழியப்பட்டவர்களில் ஹந்துன்நெத்தி முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.