1 59
இலங்கைசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின

Share

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, பெறுபேறு மதிப்பீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இவ்வாறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...