சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் சுற்றுலாப்பருவத்தில் இலங்கைக்கு வருகை தருமாறு உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப்பயணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அனைத்து சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக தீவின் அழகை இரசிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நாட்டில் தங்கியிருக்கும் போது மிக உயர்ந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சும் எடுத்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.