31 4
இலங்கைசெய்திகள்

முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Share

முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இலவச முத்திரைகள் குறித்து தபால் திணைக்களம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இலவச முத்திரைகளில் பயன்படுத்தப்படாதவற்றை அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் அல்லது நாடாளுமன்றத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, இம்முத்திரைகளை பயன்படுத்துவதற்கு தடை என்று தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த முத்திரைகளை செல்லுபடியற்றவையாக கருதப்பட வேண்டுமெனவும் நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.

இலங்கைக்கு புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொது தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மீள் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share

Recent Posts

தொடர்புடையது
nandita 759
செய்திகள்இலங்கை

எனக்குப் பிடித்தது ‘அட்டகத்தி’ தான்; சினிமாவில் நிரந்தரம் கிடையாது; கற்றுக்கொண்ட பாடம் பொறுமை”: நடிகை நந்திதா ஸ்வேதா பேட்டி!

‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

இது சலுகைகள் இல்லாத, IMF எழுதிய வரவு செலவுத் திட்டம்’: 2026 வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சனம்!

இன்று (நவ 7) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது, மக்களுக்குச் சலுகைகள்...

MediaFile 1 1
செய்திகள்இலங்கை

தொழிற்கல்வி தகவல் சேவை: ‘1966’ துரித இலக்கம் ஆரம்பம்! மும்மொழிகளிலும் AI உதவியுடன் தகவல் பெறலாம் – பிரதமர் அறிவிப்பு

இடைநிலைக் கல்விக்குப் பிறகு தொழிற்கல்விக்கு மாறுவது குறித்து மாணவர்களுக்குத் துல்லியமான மற்றும் திறன்மிக்க தகவல்களை வழங்குவதற்காக...

24 66f5b4f430c76
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு அபே ஜனபல கட்சி ஆதரவு: சிந்தக வீரகோன் அறிவிப்பு!

அபே ஜனபல கட்சி, தேசிய மக்கள் சக்தி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குத் தமது முழுமையான ஆதரவை...