தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டோருக்கு அறிவிப்பு

31 1

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டோருக்கு அறிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட அனைவருக்கும் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அனுருத்த வீரசிங்க (Anurudtha Weerasinghe) தெரிவித்துள்ளார்.

வெகுஜன ஊடக அமைச்சில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினையால், சாரதி உரிம அட்டைகளுக்கு தேவையான அட்டைகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதோடு, இந்த சிக்கலால் கிட்டத்தட்ட 8 இலட்சம் சாரதி உரிமங்கள் உள்ளன.

இந்நிலையில், தற்போது தேவையான அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய சாரதி உரிமம் மற்றும் புதுப்பித்தல்களுக்காக ஆண்டுக்கு 9 முதல் 10 இலட்சம் சாரதி உரிமங்கள் அச்சிடப்பட வேண்டும் என்றும் அனுருத்த வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version