ஜெரோம் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் வழங்கிய அறிவிப்பு

tamilni 218

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் வழங்கிய அறிவிப்பு

சர்ச்சைக்குரிய வகையில் பிற மதங்களை இழிவுபடுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு சட்டத்தின் முன் விசேட கவனம் செலுத்த முடியாது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால், தம்மை கைது செய்வதை தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி ஜெரோம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த நீதிப்பேராணை மனு,நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Exit mobile version