3 15
இலங்கைசெய்திகள்

Northern Uni இன் துணைவேந்தராக நாளை முதல் பணியாற்றவுள்ள புகழ் பெற்ற பெண் பேராசிரியர்!

Share

Northem Uni இன் துணைவேந்தராக, இலங்கையின் புகழ்பூத்த உயிர் வேதியல் துறை பேராசிரியரும், கல்வியலாளருமாகிய வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

வசந்தி அரசரத்தினம், Northem Uni இன் துணைவேந்தராக நாளையதினம்(30.06.2025)முதல் பணியேற்கவுள்ளார்.

Northern Uni சமூகம் மற்றும் அதன் தலைவர், துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டமை குறித்து தமது மகிழ்ச்சியை அறிக்கை ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்த அறிக்கையில்,”இலங்கையின் உயர் கல்வித்துறையில் ஒரு சிறந்த கல்வியாளரும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவருமான பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் அவர்கள் கல்விசார் சிறப்பு, அளப்பரிய நிர்வாகத்திறமை மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகிய தகைமைகளை உடையவர்.

அவரது புகழ்பெற்ற தொழில் வாழ்க்கை ஒரு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக நிகழ்கின்றது.

மேலும் அவரது நியமனம் Northern Uni இல் வளர்ச்சி, புதுமை மற்றும் மாற்றத்தின் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கிறது.

பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் அவர்கள் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 1981 இல் BSc (First Class) பட்டத்தினையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்து உயிர்வேதியியல் துறையில் 1989ல் PhD பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

1984 இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக தனது கல்விப் பயணத்தை ஆரம்பித்து, பின்னர் விரிவுரையாளர், மூத்த விரிவுரையாளர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டார்.

2005ல் உயிர்வேதியியலின் மூத்த பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். அவரது வாழ்க்கை பல வரலாற்று மைற்கற்களை குறித்து நிற்கின்றது.

மருத்துவ பீடத்தின் முதலாவது பெண் பீடாதிபதி (2000 – 2003)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் (2011 – 2017)

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முதல் பெண் உறுப்பினர் (2018 – 2024)

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் உயிர் வேதியல் துறையின் ஓய்வு நிலை சிரேஷ்ட பேராசிரியராகவும் முன்னை நாள் துணை வேந்தராகவும் விளங்கும் வசந்தி அரசரத்தினம் அவர்கள் தனது பணிக்காலத்தில் விஞ்ஞான ஆய்வின் வளர்ச்சிக்கும் நிர்வாக துறையின் விருத்திக்கும் உள்ளடங்கிய கல்வி முறைமையின் சீரிய எழுச்சிக்கும் வித்திட்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையின் வளர்ச்சிக்கும் பெரும் பங்கு ஆற்றியுள்ளார்.

அவரது மேலாண்மை மிக்க தலைமைத்துவம் வடக்கு மாகாணத்தின் உயர்கல்வித்துறையை தேசிய ரீதியில் மிளிரச் செய்துள்ளதுடன் அவரையும் நாடறிந்த சிறந்த கல்விமானாகப் புகழ் பெறச் செய்துள்ளது.

Northern Uni இற்கு பேராசிரியர் வசந்தி அரசரத்தினத்தின் வருகை ஒரு புதிய அத்தியாயத்தின் வெற்றிகரமான ஆரம்பமாகவும் புதுமையும் மாற்றமும் நிறைந்த கல்வி மேம்பாட்டின் ஆழமான அஸ்திவாரமாகவும் விளங்குகிறது.

மேலும் அவரது வருகை நிறுவனத்தின் கல்வி சார் அர்ப்பணிப்புக்கும் திறமைமிகு பட்டதாரிகளை உருவாக்குவதில் Northern Uni இன் தன்னிகரற்ற ஈடுபாட்டுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது.

பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் அவர்களை வாழ்த்தி வரவேற்று அவரது தலைமைத்துவத்தில் கல்விக் கொள்கைகளையும் இலக்குகளையும் அடையும் பயணத்தில் Northern Lini சமூகம் பெருமிதத்துடன் கைகோர்க்கின்றது.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 89
செய்திகள்உலகம்

பேஸ்புக் லைக் மற்றும் கமெண்ட் பட்டன்கள் 2026 பெப்ரவரி முதல் நிறுத்தப்படும்!

மெட்டா நிறுவனம், வெளிப்புற வலைத்தளங்களில் (Third-party websites) பயன்படுத்தப்படும் பிரபலமான பேஸ்புக் லைக் (Like) மற்றும்...

1762967383 Galle Prison 6
செய்திகள்இலங்கை

காலி சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய விவாதம்: நகரின் 4 ஏக்கர் வணிக நிலத்தை வளர்ச்சிக்குப் பயன்படுத்தத்…

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில்...