images 8
இலங்கைசெய்திகள்

யாழ்.மாநகர சபையின் முதல்வர் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட கருத்து

Share

இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிறுத்திய வேட்பாளர்களுக்கு வாக்களித்து தெரிவு நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்(M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

யாழ் மாநகரசபையினுடைய மேயர், பிரதி மேயர் தெரிவு தற்போது நிறைவடைந்துள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிறுத்திய வேட்பாளர்களான மதிவதனி மற்றும் இமானுவேல் தயாளன் ஆகியோர் முறையே மேயர் பிரதி மேயராக பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த தெரிவு நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நாங்கள் நன்றி செலுத்துகின்றோம்.

உள்ளூராட்சி சபைகளில் எந்தத் தரப்பினர் அதிகூடிய ஆசனங்களைப் பெற்றிருக்கின்றார்களோ அவர்களே ஆட்சி அமைக்க வேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்.

சில கட்சிகள் இந்த கோட்பாட்டுக்கு மாறாக செயற்பட்டமை வருத்தத்திற்குரியது” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...