15 4
இலங்கைசெய்திகள்

பண்பாட்டு விழாக்களின் அவசியத்தை வலியுறுத்திய வடக்கு ஆளுநர்

Share

தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு – கலாசாரம் – பழக்கவழக்கங்கள் உள்ளன. எந்தச் சூழ்நிலையிலும் அதை நாம் பாதுகாக்கவேண்டும். அவ்வாறு பாதுகாப்பதற்காகத்தான் இவ்வாறான பண்பாட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலகமும், பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேச பண்பாட்டு விழாவில் நேறறு (24) கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இன்று இளங்கலைஞர்கள் உருவாகுவது அருகி வருகின்றது. எங்கள் பண்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டுவதுடன் இளங்கலைஞர்களை ஊக்குவிப்பதற்கும் இவ்வாறான பண்பாட்டு விழாக்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றன.

இன்றைய இளைய சமுதாயம் திசைமாறாமல் இருப்பதற்கு அவர்களை கலை நிகழ்வுகளை நோக்கி ஈர்க்கவேண்டிய தேவை இருக்கின்றது.

அன்றைய நாட்களில் கிராமங்கள் தோறும் பல்வேறு கலை நிகழ்வுகள், கூத்துக்கள் நடைபெறும். இன்று அவையும் அருகிவிட்டன.

இளையோரை ஊக்குவித்து அவற்றை மீண்டும் மிளிரச் செய்யவேண்டும். இவ்வாறான பண்பாட்டு விழாக்களை கிராமங்களிலுள்ள அரங்குகளில் வைப்பது மிகச் சிறந்தது.

இந்த வேலணை துறையூர் மக்களின் பங்களிப்பும் இந்த ஏற்பாடுகளில் இருந்திருக்கின்றது. அதனால்தான் மிகச் சிறப்பாக இப்படியான விழாவை நடத்தி முடிக்க முடிந்திருக்கின்றது.

அவற்றுக்கு அப்பால் இந்த நிகழ்வில் நேர முகாமைத்துவத்தை சிறப்பாக கடைப்பிடித்த பிரதேச செயலகத்தினரையும் பாராட்டுகின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...