tamilni 352 scaled
இலங்கைசெய்திகள்

பலாலி ஜனாதிபதி மாளிகை விவகாரம்…! வடக்கு ஆளுநருக்கு சந்தேகம்

Share

பலாலி ஜனாதிபதி மாளிகை விவகாரம்…! வடக்கு ஆளுநருக்கு சந்தேகம்

வலி – வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை உள்ளடக்கிய தனியாருக்கு சொந்தமான காணிகளும் இருக்கிறதா என வடமாகாண ஆளுநர் பி.எச்.எம். சாள்ஸ் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினார்.

இன்றைய தினம் (26.10.2023) வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கலந்துரையாடலின் போது இணை தலைவராக பங்கேற்ற வடமாகாண ஆளுநர் ஜனாதிபதி மாளிகை காணி விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து குறித்த கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி மாளிகை காணி வெளிநாட்டு தனியார் ஒருவருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டமை தொடர்பில் வாத பிரதிவாதங்கள் எழுந்தது.

நிகழ்வில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த காணியை எவ்வாறு அளவீடு செய்யாமல் வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பியதுடன் காணியை இழந்த மக்களுக்கு இழப்பீடு வழங்கிய பின்னரே திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது குறிப்பிட்ட ஆளுநர் குறித்த ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதி அரச காணி தானே அதை வழங்குவதற்கு தடை ஏதும் இருக்காது என தெரிவித்தார். இதன்போது குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள விடுவிக்கப்படாத பகுதியில் பலருடைய தனியார் காணிகள் இருப்பதாக தெரிவித்தார்.

குறுக்கீடு செய்த ஆளுநர் தெல்லிப்பழை பிரதேச செயலாளரை இது தொடர்பில் விளக்கப்படுத்துமாறு கூறினார். குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் ஜனாதிபதி மாளிகைக்காக 61 ஏக்கர் காணி கேட்கப்பட்ட நிலையில் சுமார் 29 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஜனாதிபதி மாளிகை தொடர்பான விடயங்கள் எமது பொறுப்பிலிருந்து நிலையில் பொது நிர்வாக அமைச்சின் அறிவுறுத்தலின் பிரகாரம் நகர அபி விருத்தி அதிகார சபையிடம் ஒப்படைத்து விட்டதாக தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...