எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
கேள்விக்கு ஏற்ப மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால், மின்சாரத்தை துண்டிக்கவேண்டிய தேவை ஏற்படாது.
எவ்வாறாயினும், மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறும் பயனாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
#SrilankaNews