download 10 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க எவராலும் முடியாது!! –  டில்வின் பதிலடி!!

Share

இலங்கை இப்போது பொருளாதார நெருக்கடியிலிருந்து ஒரு இடைவேளையைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அதாவது நரகத்திலிருந்து ஒரு இடைவேளை தான் இதுவென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்  டில்வின் சில்வா நேற்று தெரிவித்தார்.

தற்போதைய சூழலை வைத்து இலங்கை பொருளாதார மறுமலர்ச்சியடைந்து முன்னோக்கிச் செல்கின்றது என மக்கள் நினைத்து விடக் கூடாது. மிகவும் மோசமான பொருளாதார வீழ்ச்சியை இலங்கை விரைவில் சந்திக்கும் என களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசியபோது அவர் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாங்கள் இப்போது ஒரு இடைவேளையைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவரப்போகின்றது என யாராவது நினைத்தால் அது தவறு.

இது ஒரு இடைவேளை தான். நாடு சரியான திசையில் கொண்டு செல்லப்படாததால் ஏற்கனவே அனுபவித்ததை விட மிகவும் மோசமான நிலைக்கு நாம் திரும்புவோம் என அவர் தெரிவித்தார்.

1971 ஆம் ஆண்டிற்கு பின் உற்பத்திப் பொருளதாரத்தை மேம்படுத்தாமல் பொருளாதார சொத்துக்களைப் பெறாமல் இலங்கையின் செலவுகள் அதிகரித்ததால் இந்த நெருக்கடிக்கு இப்போது முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

பொருளாதார வளங்களை பெருக்குதல் மற்றும் உற்பத்திப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக நாங்கள் கடன்களைப் பெற்றும் எமது வளங்களை விற்றுக் கொண்டும் இருந்தோம். நாங்கள் இப்போது ஒரு கடனாளி நாடாக இருக்கின்றோம். ஒவ்வொருவர் மீதும் ரூ.1.4 மில்லியன் கடன் தொகை உள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவர IMFஇடமிருந்து கடன் பெறும் அதே பழைய வழியைத் தான் ரணிலின் அரசாங்கமும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமும் தேர்ந்தெடுத்துள்ளது. நாடு ஏற்கனவே கடனால் தான் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. அதற்கு தீர்வாக அரசாங்கம் மீண்டும் கடனைத் தான் பெற்றுள்ளது.

உற்பத்திப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் கடன்களைப் பெறுவதைத் தவிர்த்து வளங்களைப் பெருக்கும் வழியைப் பின்பற்றுவதைத்  தவிர இலங்கையை இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க எவராலும் முடியாது என சில்வா வலியுறுத்தினார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...