யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் புதிய நியமனங்கள் எவையும் வழங்கப்படவில்லை என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் விளக்கமளித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தினூடாகவே இதனை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான பிரதமர் அலுவலக பிரதிநிதி ஒருவரின் பெயர் பரிந்துரை மாத்திரமே இடம் பெற்றுள்ளது என்பதையும் அது தொடர்பான கடிதம் நமக்கு கிடைத்துள்ளது என்பதையும் தெளிவு படுத்துகிறோம்
எனவே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் புதிய நியமனம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளியாகிய செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை.
அத்தோடு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கு எதிரான முறைப்பாடுகள் பிரதமர் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளன என்ற செய்தி அறிக்கையிடல்களும் போலியானவை.
ஒருசில சுயலாப ஊடகவியலாளர்களால் திட்டமிட்டு பரப்பப்படும் செய்திகளை ஏனைய ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பிரசுரிப்பது அவர்களின் ஊடகத்துக்கு விரோதமான செயலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்கெதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதற்கமைய பிரதமர் அலுவலக பிரதிநிதியாக காசிலிங்கம் கீதநாத் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்ருந்தன.
Leave a comment