Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 1
இலங்கைசெய்திகள்

நாட்டில் இனிமேலும் இனவாதம் இருக்கக் கூடாது: இளங்குமரன் எம்.பி

Share

இந்த நாட்டில் இனிமேலும் இனவாதம் இருக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில் நீண்ட காலம் புனரமைக்கப்படாது இருந்த ஏழாம் யுனிற் மூன்றாம் வீதியின் ஒருகிலோமீற்றர் வீதியின் அபிவிருத்தி பணிகள் 47 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் , இந்த நாட்டிலே இனி மேலும் இனவாதம் இருக்கக் கூடாது, யுத்தம் தோற்றுவிக்கப்படக்கூடாது ஊழல்களுக்கு இடமளிக்க கூடாது, ஊழல்களுக்கு உடந்தையாக இருக்கக் கூடாது.

புதியதோர் கலாச்சாரத்தை உருவாக்கி நல்லதொரு நாட்டை எதிர்கால சந்ததிக்கு ஒப்படைப்பதே எமது பொறுப்பாகும்.

வெளிநாட்டு தூதுவர்கள் இப்பொழுது வருகின்றார்கள். பகை விடப்பட்ட தொழிற்சாலைகளை உருவாக்குகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் துறை சார்ந்த திணைக்களங்களுடைய தலைவர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...