19 16
இலங்கைசெய்திகள்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : சஜித் தரப்பின் அறிவிப்பு

Share

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : சஜித் தரப்பின் அறிவிப்பு

அசோக ரன்வல (Asoka Ranwala) சபாநாயகர் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில் அவருக்கு எதிராகக் கைச்சாத்திடப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அவசியமில்லை என ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தெரிவித்துள்ளது.

எனினும், ஒழுக்க நெறியை மீறியமை தொடர்பில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா (Ajith P Perera) தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் பதவி விலகியுள்ள போதிலும் தமது கல்வித் தகைமை தொடர்பில் இதுவரையில் உரிய வகையில் அவர் விளக்கமளிக்கவில்லை என மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், பட்டங்களைப் பெற்றுள்ளதாகப் போலியான தகவல்களைச் சமர்ப்பித்துள்ள மேலும் பலர் ஆளும் தரப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கற்றவர்களை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவருவதாகக் கூறி, தேசிய மக்கள் சக்தி (NPP) பொய்யர்களை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறானவர்களைக் களையெடுப்பதற்கு, மீண்டுமொரு சிரமதானத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா கூறியுள்ளார்.

இதேவேளை, சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

இதன்படி நாளை மறுதினம் (17) மீண்டும் நாடாளுமன்றம் கூடும் போது புதிய சபாநாயகரை நியமிக்கவுள்ளதுடன் சபாநாயகர் பதவிக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, பிரதி சபாநாயகர் மொஹமட் றிஸ்வி சாலி (Mohammed Rizvi Salih), நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி (Nihal Galappaththi) மற்றும் லக்ஷ்மன் நிபுணாராச்சி (Lakshman Nipuna Arachchi) ஆகியோரில் ஒருவர் புதிய சபாநாயகராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் புதிய சபாநாயகர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...