2026-லும் பாடசாலை நேரங்களில் மாற்றமில்லை: தரம் 1 மற்றும் 6-க்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அமல்!

MediaFile 2

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நேர அட்டவணையைத் திருத்துதல் மற்றும் கல்விசார் ஆளணியினரைப் பயன்படுத்தல் தொடர்பில் கல்வி அமைச்சினால் அறிவுறுத்தல் கோவை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நடைபெறும் நேரத்தை, தற்போது நடைமுறையில் உள்ளவாறே மு.ப. 7.30 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய, புதிய கல்விச் சீர்திருத்தச் செயன்முறையானது 2026 ஆம் ஆண்டிலிருந்து தரம் 1 மற்றும் தரம் 6 இற்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

Exit mobile version