9 7
இலங்கைசெய்திகள்

தேரர் ஒருவரின் விடுதலை பல இலட்சம் முஸ்லிம் சமூகத்தினரின் கையில்!

Share

தேரர் ஒருவரின் விடுதலை பல இலட்சம் முஸ்லிம் சமூகத்தினரின் கையில்!

ஞானசார தேரருக்கு மன்னிப்புக் கொடுக்கும் விவகாரமானது நாட்டின் சட்டத்தோடும் உயர் நீதிமன்றத்தோடும் நேரடியாக தொடர்புற்றிருக்கும் நிலையில் முஸ்லிம் சமூகத்துடனும் தொடர்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களதும் கருத்தைப் பெறாமல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவோ, முஸ்லிம் சிவில் அமைப்புக்களோ, அரசியல் பிரமுகர்களோ இது தொடர்பில் எந்தவித நிலைப்பாடுகளையும் எடுக்க முடியாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்டத்துறை வல்லுநர்கள், அரசியல் பிரமுகர்கள், துறைசார்ந்தவர்கள், ஆலிம்கள் ஆகியோரிடையிலான விஷேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தெஹிவளை பெரிய ஜும்மா பள்ளிவாசலில் அதன் நிர்வாகத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்றது.

பொதுவாக சமூகம் சார் விடயங்களில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவானது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது தேவையேற்படும் பட்சத்தில் இவ்வாறு சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் துறைசார்ந்தவர்களை அழைத்து, கலந்தாலோசிக்கும் வழக்கத்தின் அடிப்படையிலேயே இச்சந்திப்பும் நடைபெற்றுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக நிரூபனமாகி, நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையிலிருக்கும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொடுக்கும் விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுபலசேனா அமைப்பினால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்தே குறித்த விடயத்தினை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டு, ஞானசார தேரருக்கு மன்னிப்பு கொடுக்கும் அதிகாரம் அனைத்து முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புடையது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....