ஒரு நாள் காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் காரணமாக ஒன்பது மாதப் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் நெடுந்தீவு 11ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.
அமலதாஸ் டேம்ஸ்யான்சிகா என்னும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.
குழந்தைக்கு நேற்றுமுன்தினம் இரவு காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று நண்பகல் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
#SriLankaNews