அடுத்த வருடம் ஐ.தே.க தலைமையில் புதிய ஆட்சி

tamilni 261

அடுத்த வருடம் ஐ.தே.க தலைமையில் புதிய ஆட்சி

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியே 2024 ஆம் ஆண்டில் அமையும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது கட்சிக்கு, நாட்டுக்கு தற்போது ஸ்மார்ட் தலைவர் ஒருவர் இருக்கின்றார். அவரை உலகம் ஏற்கின்றது.

தூர நோக்கு சிந்தனை அவரிடம் இருக்கின்றது. எனவே, நாட்டில் எல்லாத் துறைகளும் நவீனமயப்படுத்தப்படும்.

அந்தவகையில் எமது நாடு ஸ்மார்ட் நாடாக மாறும் ” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version