பிரித்தானிய உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர்

rtjy 277

பிரித்தானிய உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர்

பிரித்தானியாவிற்கான இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்படவுள்ளார்.

அவரை ஏற்றுக்கொள்வதில் பிரித்தானிய அரசாங்கம், நீண்ட காலதாமதத்தை ஏற்படுத்திய நிலையிலேயே தற்போது அதற்கான ஒப்புதல், அந்த நாட்டிடம் இருந்து கிடைத்துள்ளது.

ஒரு காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சராக இருந்த அவர், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச நிர்வாகங்களிலும் கிழக்கு மாகாண ஆளுநராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராக அவர் எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version