நியூஸிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், இன்று(24.05.2025) இலங்கை வருகின்றார்.
அவர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது பயணத்தின் போது, பீட்டர்ஸ், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உட்பட்டவர்களை சந்திக்கவுள்ளார்.
வர்த்தகம், முதலீடு, விவசாயம், கல்வி, சுற்றுலா மற்றும் விளையாட்டு ஆகியவற்றில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதே அவருடைய பயணத்தின் நோக்கமாகும்.
இந்தநிலையில், பீட்டர்ஸுடன் நியூஸிலாந்தின் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் மூன்று மூத்த அதிகாரிகளும் இலங்கை வருகின்றனர்.