7 19
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி : பலர் கலக்கத்தில்

Share

சட்டவிரோத சொத்துக்குவிப்பு தொடர்பில் விசேட விசாரணை பிரிவு இலங்கையில் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவிப்புக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட விசாரணை பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இந்த விlயத்தை விசாரணை பிரிவு பழைய பொலிஸ் தலைமையாக கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் இந்த அலுவலகம் ஆர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் இன்று முற்பகல் குறித்த பிரிவு அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் பணம் சொத்துக்கள் குவித்தல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. பணிப்பாளர் நாயகம் ஒருவரின் தலைமையின் கீழ் இந்த விசாரணை பிரிவு இயங்க உள்ளதாகவும் பிரதி பனிப்பாளர் நாயகம் ஒருவரும் இந்தப் பிரிவிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட 3 ஆண்டுகளுக்கு இந்த பிரிவின் பணிப்பாளர் நியாயமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதித்துள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நிதி குற்ற விசாரணை பிரிவு ஆகியனவற்றின் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபராக அசங்க கரவிட்ட கடமையாற்றி வருகின்றார்.

குற்றம் ஒன்றின் மூலம் உழைக்கப்படும் பணம் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை 30 நாட்களுக்கு தடை செய்யவோ அல்லது பறிமுதல் செய்வதற்கோ இந்த விசேட விசாரணைப் பிரிவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் குவிக்கப்பட்ட சொத்துக்கள் வெளிநாடுகளில் காணப்பட்டாலும் இந்த புதிய சட்டத்தின் மூலம் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...