19 29
இலங்கைசெய்திகள்

தொடருந்து சேவைகளில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

Share

தொடருந்து சேவைகளில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

பல புதிய தொடருந்து சேவைகளை அறிமுகப்படுத்த தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கும் நீண்ட தூர சேவைகளுக்காகவும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக மலையக மார்க்கம், தொடருந்து சுற்றுலாப் பயணிகளிடையே, பிரபலமாகவும், ஈர்ப்பு அதிகமாகவும் இருப்பதுடன் தொடருந்து சேவைக்கான அதிக கேள்வி இருப்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனவரி 31ஆம் திகதி முதல் கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவையும் தினசரி சேவையில் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

புதிய தீர்மானத்தின்படி, எல்ல- ஒடிஸி – கொழும்பு தொடருந்து சேவையில் மேலதிக பயணத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்புக்கும் பதுளைக்கும் இடையிலான எல்லா- ஒடிஸி – கொழும்பு தொடருந்து சேவையில் மேலதிக தொடருந்து பயணத்தை பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொழும்பிலிருந்தும், பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பதுளையிலிருந்தும் புறப்படும்.

இதேவேளை பெப்ரவரி மாதம் முதல் எல்ல – ஒடிஸி – கண்டி மற்றும் எல்ல- ஒடிஸி – நானு ஓயா ஆகிய இரண்டு புதிய தொடருந்து சேவைகளை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், எல்ல – ஒடிஸி – கண்டி தொடருந்து சேவை, பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் கண்டிக்கும் தெமோதரவுக்கும் இடையில் இயக்கப்படும் என்று தொடருந்து பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

எல்ல ஒடிஸி – நானுஓயா தொடருந்து சேவை, பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி முதல் நானுஓயா மற்றும் பதுளைக்கு இடையில் இயக்கப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...