நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி

24 66066381a0674

நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி

உள்ளூர் உற்பத்தியாளரைப் பாதுகாக்கவும் நுகர்வோரைப் பாதுகாக்கவும் புதிய வரி அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலை (Kegalle) மாவட்டம் ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன், 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் விசேட வர்த்தக வரியை நீக்குவதற்கான யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த முடிவை எடுத்ததற்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரிகளை எளிமையாக்கியதும் ஒரு காரணமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version