21 14
இலங்கைசெய்திகள்

இணையப்பதிவு முறை நீக்கம்: புதிய முறைமை குறித்து வெளியான தகவல்

Share

இணையப்பதிவு முறை நீக்கம்: புதிய முறைமை குறித்து வெளியான தகவல்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையப் பதிவு முறையை நீக்கிய பின்னர் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான புதிய முறையை, இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி முதல் கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிக்க பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய முறைக்கமைய, குடிவரவுத் திணைக்களத்திற்கு வருகை தரும் வரிசையின் அடிப்படையில் ஒரு நாள் சேவையின் கீழ் ஒரு நாளைக்கு 400 கடவுச்சீட்டுகளும், சாதாரண சேவையின் கீழ் 250 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.ஷ

அத்துடன், எதிர்வரும் காலங்களில் இ – கடவுச்சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் வரை, பொதுமக்கள் தங்களுடைய தற்போதைய கடவுச்சீட்டுக்களை பயன்படுத்த முடியும் எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடளாவிய ரீதியில் 51 பிரதேச செயலகங்கள் ஊடாக இணையக்கடவுச்சீட்டு முறையை இலங்கை அறிமுகப்படுத்தியது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முறையின் கீழ், மக்கள் மூன்று நாட்களுக்குள் 15,000 ரூபா மற்றும் 14 நாட்களுக்குள் 5,000க்கு கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இருப்பினும், இணையக் கடவுச்சீட்டுக்கள் அமைப்பு பல சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில் தோல்வியடைந்தது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...