சுகாதார அமைச்சிற்கு புதிய அதிகாரி!!

c93c5192 8082ab17 ministry of health

நாட்டில் சுகாதார துறையை சிறப்பாக பேணுவதற்கும் தடையற்ற சேவையை வழங்குவதற்கும் என புதிய ஒருங்கிணைப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைக்கவும், எளிதாக்கவும், தொடர்பு கொள்ளவும் சுகாதார அமைச்சகத்தின் சார்பில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய சவாலான காலக்கட்டத்தில் தடையில்லா சேவையை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் நன்கொடை வழங்கும் முகவர்கள், மாகாண மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகள் ஆகியோரை சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருங்கிணைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் அதிகரித்து வரும் மருந்துப் பற்றாக்குறையை அடுத்து, சில மருத்துவமனைகள் சில அறுவை சிகிச்சைகளை இடைநிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews

 

Exit mobile version