இலங்கைசெய்திகள்

புலம்பெயர் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

Share
1 10
Share

புலம்பெயர் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

இலங்கையிலிருந்து(sri lanka) புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழு் நாடுகளில் உள்ள  சிறிலங்கா தூதரகங்களில் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி பெற்றுக்கொள்ள முடியும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(anura kumara  dissanayake)டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கு அமைய இந்த திட்டம் இன்று (06) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தால் (vijitha herath)ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்படி, 07 தூதரகங்களுக்கு இந்த முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், ஜப்பான், கட்டார், குவைத் தூதரகங்கள், மிலானோ, டொறொன்டோ, மெல்பேர்ன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளின் துணைத் தூதரகங்கள் ஊடாக அந்த நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மேற்படி ஆவணங்களை தாமதமின்றி பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் அனைத்து தூதரகங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...