டெல்டாவின் உபமாறுபாட்டுக்கு புதிய பெயர்!

delta

நாட்டில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸின் டெல்டா திரிபின் உப மாறுபாட்டுக்கு புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உயிரியல் பிரிவின் தலைவர் மருத்துவர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி டெல்டாவின் உபமாறுபாட்டுக்கு ‘AY28’ என்று அதிகாரபூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் கண்டறியப்பட்ட 95 சதவீதமான நோயாளர்களுக்கு டெல்டா வைரஸ் திரிபே தொற்றியிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல்டா திரிபின் இந்த மாறுபாடு முதலில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவால் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version