சர்வதேச வானியலாளர்கள் சூரிய குடும்பத்தின் வழியாக ஒரு விண்மீன்களுக்கு இடையேயான (interstellar) பொருள் வேகமாக பயணிப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது விண்மீன்களுக்கு இடையிலான நகர்வு பந்தையத்தில் கலந்துக்கொண்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தப் பொருளை, தற்போது A11pl3Z என வானியலாளர்கள் பெயரிட்டுள்ளனர்.
மேலும், இது மூன்றாவது வானியல் இடைவெளி பொருள் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வானியல் பொருட்களான 1I/ʻOumuamua (2017) மற்றும் 2I/Borisov (2019) என்பன போல் இல்லாது, A11pl3Z விசித்திரமான வடிவிலான பொருள் என்றும் இது ஒரு வால்வெள்ளி என அடையாளம் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட A11pl3Z ஆனது அதன் பாதை மற்றும் பண்புகள் மூலம் இது சூரிய குடும்பத்திற்கு வெளியிலிருந்து வந்தவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) மற்றும் பிற வானியல் அவதானிப்பு மையங்களால் கண்காணிக்கப்பட்டு A11pl3Z வருவதாக கூறப்படுகிறது.
இதன் வேகமும், பாதையும் சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு மூலத்திலிருந்து தோன்றியதைக் குறிப்பதாக ஆய்வாளர்கள் கூறியள்ளனர்.
இதுபோன்ற பொருட்கள் பால்வெளி மண்டலத்தில் உள்ள மற்ற நட்சத்திர அமைப்புகளிலிருந்து பயணித்து வரக்கூடும், என்றும் மேலும் இவை சூரிய குடும்பத்தின் பரிணாம வளர்ச்சி மற்றும் பிற நட்சத்திர அமைப்புகளின் பண்புகளைப் புரிந்துகொள்ள உதவலாம் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் பல சந்தர்ப்பங்களில் விஞ்ஞானிகள், இதுபோன்ற பல விண்மீன்களுக்கு இடையேயான பொருட்கள் நமது கவனத்திற்கு வராமல் கடந்து செல்லக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
A11pl3Z ஆனது தற்போது பூமியில் இருந்து 3.8 AU தொலைவிலும் (Astronomical Units) மற்றும் சூரியனில் இருந்து 4.8 AU தொலைவிலும் காணப்படுகிறது.
மேலும், சிலி மற்றும் ஹவாய் உள்ளிட்ட பல தொலைநோக்கிகள் மூலம் இதன் பாதை மற்றும் பண்புகள் கண்காணிக்கப்படுகின்றன.