2 34
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

Share

கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அண்மையில் பதவி விலகியிருந்தனர்.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் பதவி விலகியதை தொடர்ந்து குறித்த பதவிக்கு ஜயந்த லால் ரத்னசேகர ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டள்ளார்.

ஜயந்த லால் ரத்னசேகர கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.

இவர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை பணியாற்றியுள்ளார்.

ஜயந்த லால் ரத்னசேகர தனது ஆரம்ப கல்வியை கந்தளாய் அக்ரபோதி வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வி கொழும்பு நாலந்தா கல்லூரியிலும் (1972-1980) தொடர்ந்துள்ளார்.

தொடர்ந்து இவர், ரஷ்யாவின் மக்கள் நட்பு பல்கலைக்கழகத்தில்(Peoples’ Friendship University of Russia )1988 இல் வேதியியலில் கலைமானி பட்டம் பெற்றதை தொடர்ந்து, 1993 இல் அவர் வேதியியலில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

மேலும், 1988 இல் வேதியியலில் கலைமானி பட்டம் பெற்றதை தொடர்ந்து, 1993 இல் அவர் வேதியியலில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

ரத்னசேகர 1996 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக இணைந்தார்.

மேலும் 2018 இல் வேதியியலில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

இதனை தொடர்ந்து அவர், 2017 ஜனவரியில் இலங்கை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

மேலும், 2021 இல் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குநர்கள் குழுவின் (CVCD) தலைவராக பணியாற்றியுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், சுற்றுச்சூழல் வேதியியல், கோட்பாட்டு வேதியியல், உயர் கல்வியில் தர உத்தரவாதம் மற்றும் அறிவியல் கல்வி ஆகியவற்றில் ஆராய்ச்சி தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 18 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முடங்கும் சுகாதாரத் துறை? – தரவுகளைப் புறக்கணிக்க மருத்துவர்கள் சங்கம் முடிவு; நாளை முதல் போராட்டம் தீவிரம்!

தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய எழுத்துப்பூர்வ உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகக் கூறி, நாளை (18) முதல்...

image 1200x800 19
செய்திகள்இலங்கை

சபரிமலை வழக்கு: ஏப்ரல் 7 முதல் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை! – சட்டப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்ற 2018-ஆம் ஆண்டின் தீர்ப்பை எதிர்த்துத்...

image 1200x800 31
செய்திகள்உலகம்

பிரித்தானியாவின் புதிய பயண விதிகளால் பெண்களுக்குச் சிக்கல்! – பெயர்ப் பொருத்தமின்மை பாரபட்சமாக அமைவதாகக் குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் புதிய எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் எதிர்வரும் பிப்ரவரி 25 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன....

image 1200x800 17 1
செய்திகள்உலகம்

விண்ணில் தோன்றும் நெருப்பு வளையம்! – 2026-இன் முதல் சூரிய கிரகணம் இன்று; எங்கே காணலாம்?

2026-ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (17) செவ்வாய்க்கிழமை நிகழ்கிறது. இது ஒரு ‘வளைய...