8 17
இலங்கைசெய்திகள்

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடல், கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம், பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கைக் குழுவின் பிரதிநிதிகளுடன் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

“கல்வியை மாற்றுவோம், இலங்கையை மாற்றுவோம்”

இதன்போது, புதிய கல்வி சீர்திருத்தத்தினூடாக அழகியல் பாடங்கள், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி ஆகியவை நீக்கப்படாது எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை “கல்வியை மாற்றுவோம், இலங்கையை மாற்றுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கல்வி முறையில் உள்ள பலவீனங்களைச் சமாளித்து, புதிய கல்விச் சீர்திருத்தங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்தும், அதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டுள்ளது.

1 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்புவரை, 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை, 10 ஆம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்புவரை கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

பாலர் பாடசாலைக் கல்வி விருத்தி, தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆகிய துறைகளில் கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாடத்திட்டத் திருத்தம், பாட உள்ளடக்கம், கல்வி, பாடசாலைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர் பயிற்சி, அணுகுமுறை, கல்வித் துறையில் தொழில்முறை விருத்தி, மதிப்பீட்டு முறைகளைச் சீர்திருத்துதல் மற்றும் கல்விக் கொள்கைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images
செய்திகள்இலங்கை

எம்.பி. செல்வம் அடைக்கலநாதனுக்கு உயிர் அச்சுறுத்தல்: கனடா நபர் மீது புகார் – யூடியூபர் மீதும் மன்னார் நகரபிதா முறைப்பாடு!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணக் காவல் நிலையத்தில் முறைப்பாடு...

court
இலங்கைசெய்திகள்

நாடு கடத்தப்பட்ட சந்தேக நபர்கள் 90 நாட்கள் தடுப்புக் காவலில்: குண்டுச் சம்பவங்களுடன் தொடர்பு குறித்து விசாரணை!

இலங்கையில் நடந்த குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்டு, அண்மையில் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று...

w 1280h 720format jpgimgid 01k941vebwvgjntwjfmrjvf3ysimgname trump 1762146498940
செய்திகள்உலகம்

இரகசியமாக அணு ஆயுதப் பரிசோதனை செய்கின்றன: அமெரிக்காவும் பரிசோதிப்பதில் தவறில்லை – டொனால்ட் ட்ரம்ப்!

பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு...

Anil Ambani
இந்தியாசெய்திகள்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் மோசடி: அனில் அம்பானி குழுமத்தின் ₹ 7,500 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் முடக்கம்!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) மற்றும் அதன் இணை நிறுவனங்கள் மீதான கடன் மோசடி வழக்குகளைத் தொடர்ந்து,...