புதிய அரசியலமைப்புக்கான வரைவு நகலானது 2022 ஜனவரியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்படவுள்ளதென தெரியவருகின்றது.
புதிய அரிசியலமைப்புக்கான வரைவு நகலை தயாரிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது.
இந்த குழுவானது பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல தரப்பினரிடமும் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெற்றது.
இந்நிலையில் நிபுணர் குழுவின், புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் 2021 டிசம்பரில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் எனவும், 2022 ஜனவரி முதல் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகும் எனவும் அமைச்சர் பீரிஸ் அறிவித்திருந்தார்.
ஆனால் இன்னும் நிபுணர் குழுவின் அறிக்கை கையளிக்கப்படவில்லை. அது தொடர்பில் வினவப்பட்டபோதே 2022 ஜனவரியில் கையளிக்கப்படலாம் என தெரியவந்தது.
#SrilankaNews
Leave a comment