20 17
இலங்கைசெய்திகள்

அறிமுகமாகும் புதிய மதுபான வகை

Share

அறிமுகமாகும் புதிய மதுபான வகை

சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்காக மதுபான வகையொன்று அடுத்த வருடம் முதல் தயாரிக்கப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் (Excise Department of Sri Lanka) ஆணையாளர் நாயகம் உதயகுமார பெரேரா (Udayakumara Perera) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) நேற்றையதினம் (18.12.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், மதுவரித் திணைக்களத்தின் இந்த வருடத்துக்கான வருமான இலக்கில் இதுவரையில் 210 மில்லியன் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டவிரோத மதுபான உற்பத்தி காரணமாக மதுவரித் திணைக்களத்துக்கு வருடாந்தம் 30 வீதமான வருமான இழப்பு ஏற்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தடுக்கும் வகையிலும் பொதுமக்களை சட்டவிரோத மதுபான பாவனையில் இருந்து மீட்பதற்கும் குறைந்த விலையில் மதுபான வகையொன்றை அறிமுகப்படுத்த மதுவரித் திணைக்களம் தீர்மாணித்துள்ளது.

தற்போதைக்கு இது தொடர்பான கலந்துரையாடல்கள் நிதியமைச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை 2024ஆம் ஆண்டுக்கான மதுவரித் திணைக்களத்தின் வருமான இலக்காக 232 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...