வெளிநாட்டு மருத்துவப் பட்டங்கள் தொடர்பில் தகவல்

tamilni 93

வெளிநாட்டு மருத்துவப் பட்டங்கள் தொடர்பில் தகவல்

இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களின் மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புதிய சட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு குறித்த சட்டம் தொடர்பான முன்மொழிவுகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டப் படிப்புகளை அங்கீகரிப்பதன் அடிப்படையில், தரநிலைகள் மற்றும் அளவுகோல்களை உள்ளடக்கிய தேசியக் கொள்கையை வகுக்க பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்று முன்னர் நியமிக்கப்பட்டது.

தற்போதைய தேவைக்கு ஏற்ப மருத்துவ ஆணை சட்டத்திற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Exit mobile version