சேதமடைந்த பாலங்களைப் புனரமைக்க நெதர்லாந்து ஆதரவு: பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் தூதுவர் இணக்கம்!

image ac8d38d022

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் சேதமடைந்துள்ள பாலங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்க இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் வீப் டி போர் (Wiebe de Boer) இணக்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் வீப் டி போர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

சமீபத்திய அனர்த்தத்திலிருந்து இலங்கை மீண்டுவர ஆரம்பித்திருக்கும் இந்தச் சவாலான காலப்பகுதியில் இரு நாடுகளின் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து இந்தக் கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது.

அனர்த்த பாதிப்புகளை குறைத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் எதிர்கால ஒத்துழைப்பிற்கான வழிகள் குறித்து பிரதமரும் தூதுவரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர் என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (a)

Exit mobile version