கொழும்பு மாநகர சபை அதிகாரத்தை கைப்பற்ற அநுர தலைமையில் பேச்சுவார்த்தை

16 20

கொழும்பு மாநகர சபையின் நிர்வாக அதிகாரத்தை நிறுவுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கும் கொழும்பு மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சுயேச்சை குழுக்களின் உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளன.

இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர திசாநாயக்கவிற்கும் சுயேச்சை குழு உறுப்பினர்களுக்கும் இடையில் பெலவத்தில் உள்ள ஜே.வி.பி கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலைத் தொடர்ந்து, சுயேச்சை குழு எம்.பி.க்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஆட்சியை நிலைநாட்டுவதில் தேசிய மக்கள் கட்சிக்கு நிபந்தனையின்றி ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவுவதற்கு அருகில் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

கொழும்பு மாநகர சபைக்கு ஒன்பது சுயேச்சை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்தி நாற்பத்தெட்டு இடங்களை வென்றுள்ளது.

இருப்பினும், கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட ஐம்பத்தொன்பது இடங்கள் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version