6 50
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்தின் எதிர்மறை செயற்பாடுகளை அம்பலப்படுத்திய முன்னாள் அமைச்சர்

Share

அநுர அரசாங்கத்தின் எதிர்மறை செயற்பாடுகளை அம்பலப்படுத்திய முன்னாள் அமைச்சர்

அரசாங்கம் நாளுக்கு நாள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(29) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”அரசாங்கம் நாளுக்கு நாள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராக செயற்பட்டு வருகிறது.

ஜே.வி.பி.யும் தேசிய மக்கள் சக்தியும் தம்மைத் தவிர ஏனைய அனைவரும் கள்வர்கள் என்பதையே மக்கள் மனதில் பதியச் செய்துள்ளனர். ஏனைய அரசியல்வாதிகள் அனைவரையும் கள்வர்களாக்கியுள்ளனர். ஆனால் இன்று அவர்கள் என்ன செய்கின்றனர்?

அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் 50 000 ரூபா டிக்கட் பெற்று அபா இசை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். அந்த இசை நிகழ்ச்சியில் ஒரு மேசைக்கு 5 இலட்சம் ரூபாவாகும். இவர்கள் 10 இலட்சத்துக்கு இரு மேசைகளை முன்பதிவு செய்திருக்கின்றனர்.

அந்த 10 இலட்சம் ரூபாவில் வறுமையிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியிருக்கலாமல்லவா?

முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சியைக் கைப்பற்றியவர்களின் செயற்பாடுகள் இவ்வாறு தான் அமைந்துள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அதிசொகுசு வாகனங்களைப் பயன்படுத்துவதாகக் கூறினர். ஆனால் இன்று அவர்களும் அதே வாகனங்களையே பயன்படுத்துகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் எவருக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படவில்லை. முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறியவர்கள் இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.

தாம் பதவிகளை ஏற்றாலும் பேரூந்திலேயே நாடாளுமன்றம் வருவோம் என்றும், வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவோம் என்றும் கூறியவர்கள் இன்று அதனை பின்பற்றுகின்றனரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...