MediaFile 6
இலங்கைசெய்திகள்

நெடுந்தீவு தொல்பொருள் சின்னம் சேதம்: பிரதேச சபை தவிசாளர், ஒப்பந்ததாரர் பிணையில் விடுவிப்பு!

Share

நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை (சின்னத்தை) சேதப்படுத்திய விவகாரத்தில் இன்று (நவம்பர் 06) கைது செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் பிணையில் செல்ல ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை வீதி புனரமைப்பின் போது, தொல்பொருள் சின்னமாக அடையாளமிடப்பட்டிருந்த ஒரு பகுதி சேதமாக்கப்பட்டதால் இந்தச் சர்ச்சை எழுந்தது. இந்தச் சம்பவத்தின்போது நேற்றைய தினம் (நவம்பர் 05) சாரதிகள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, துறைசார் திணைக்களத்தின் நடவடிக்கையின் பிரகாரம் யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில், யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். நீதிமன்றம் அவர்களை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...