கணவருடன் ரோட்டு கடைக்கு சென்ற நயன்தாரா.. வைரலாகும் வீடியோ, இதோ

24 66345e0e3be4b

கணவருடன் ரோட்டு கடைக்கு சென்ற நயன்தாரா.. வைரலாகும் வீடியோ, இதோ

தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது இந்தியளவில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார் நடிகை நயன்தாரா.

ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இவருக்கு பாலிவுட் பக்கம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்திற்காக நடிகை நயன்தாராவிற்கு தொடர்ந்து பல்வேறு விருதுகளும், அங்கீகாரமும் கிடைத்து வருகிறது. அதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

நயன்தாரா கைவசம் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய திரைப்படங்கள் உள்ளன. சில பாலிவுட் படங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

இந்த நிலையில், நடிகை நயன்தாரா தனது காதல் கணவர் மற்றும் நண்பர்களுடன் இரவு நேரத்தில் ரோட்டு கடை ஒன்றில் சாப்பிட சென்றுள்ளார். அங்கிருந்த ரசிகர் ஒருவர் எடுத்து வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version