யாழில் CID அதிகாரிகளை பின்தொடர்ந்த கடற்படை புலனாய்வுப் பிரிவு – உண்மைகளை கண்டுபிடிக்க தடங்கல்

23 653a1a1a78b85

கடற்படை குழுவினரால் காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் குறித்து விசாரிக்க சென்ற குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளை கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பில் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தை விசாரிக்க பருத்தித்துறைக்கு விசாரணை அதிகாரிகள் சென்றபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு பேர் அவர்களை பின்தொடர்ந்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் கடற்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, கடற்படை புலனாய்வுப் பிரிவின் லெப்டினன்ட் கொமாண்டர் ஒருவரால் அவர்களை பின்தொடர்வதற்கான உத்தரவு வழங்கப்பட்டதாக குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

Exit mobile version