cockroach caye
இலங்கைசெய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: கரையோர மற்றும் சமுத்திரச் சூழலில் இயற்கை மூலதனப் பெறுமதி திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Share

இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடல் தொகுதிகளில் இயற்கை மூலதனப் பெறுமதி (Natural Capital Valuation) மற்றும் அதனைப் பேண்தகு அபிவிருத்தித் திட்டங்களுடன் ஒருங்கிணைத்தல் கருத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வியாழக்கிழமை (டிசம்பர் 11) இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆர்வம் காட்டுகின்ற பல நாடுகள் இயற்கை மூலதனப் பெறுமதியை மதிப்பீடு செய்தல் மற்றும் கணக்கிடலை மேற்கொண்டாலும், இலங்கையில் இதுவரையில் சரியான வகையிலும் போதுமான அளவிலும் இந்தக் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையை மேம்படுத்தும் நோக்கில், ‘இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடல் தொகுதிகளில் இயற்கை மூலதனப் பெறுமதி பேண்தகு அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஒருங்கிணைத்தல்’ என்ற கருத்திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டது.

இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலகளாவிய சுற்றாடல் வசதி இன் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தக் கருத்திட்டம் இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சங்கம் (IUCN) மற்றும் சுற்றாடல் அமைச்சு ஏனைய பங்காளர்களுடைய ஒத்துழைப்புக்களுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

குறித்த கருத்திட்டத்தின் செயற்பாடுகள் காலி, மன்னார், புத்தளம் மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களில் அடையாளங் காணப்பட்ட கரையோரப் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக 2.66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி கிடைக்கப் பெறவுள்ளது.

உலகளாவிய சுற்றாடல் வசதியால் வழங்கப்படும் நிதியைப் பயன்படுத்தி குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்கான உடன்பாட்டு ஒப்பந்தத்தில் சுற்றாடல் அமைச்சு மற்றும் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச சங்கம் (IUCN) ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...