மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய கரிசல் கிராமத்தில் புதிய நீர் இணைப்புகளை வழங்குவதற்கான விசேட முகாம் நாளை (நவம்பர் 21, 2025) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாம் பெரிய கரிசல் பள்ளிவாசலில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.
வழக்கமாகப் புதிய நீர் இணைப்பைப் பெற்றுக் கொள்வதற்குப் பொதுமக்கள் அலுவலகத்திற்குப் பலமுறை செல்ல வேண்டியிருப்பதோடு, விண்ணப்பித்தல், கள ஆய்வு மற்றும் மதிப்பீட்டுத் தொகையைச் செலுத்துதல் போன்ற நடைமுறைகளுக்கும் அதிக நாட்கள் தேவைப்படுகின்றன.
பொதுமக்களின் இத்தகைய சிரமங்களைக் குறைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், விண்ணப்பம் கோருதல் முதல் கட்டணம் செலுத்துதல் வரையிலான அனைத்து சேவைகளையும் ஒரே நாளில், ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தேவையற்ற அலைச்சல்கள் இன்றிப் புதிய நீர் இணைப்புக்கான சேவைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

