50 பிரபல தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம்

tamilni 12

50 பிரபல தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம்

நாட்டிலுள்ள மிகவும் பிரபலமான 50 தேசிய பாடசாலைகளில் ஜூன் 30 ஆம் திகதி ஏற்படும் அதிபர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.

கொழும்பு ரோயல், நாலந்தா, தேவி பாலிகா, சிறிமாவோ பண்டாரநாயக்க, மொரட்டுவ பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ், மஹானுவர கிங்ஸ்வுட், கம்பஹா பண்டாரநாயக்க உள்ளிட்ட ஐம்பது தேசிய பாடசாலைகளுக்கு இவ்வாறு அதிபர் வெற்றிடம் ஏற்படவுள்ளது.

எனவே இவ்வாறு வெற்றிடமாகவுள்ள அதிபர் பதவிக்கு எதிர்வரும் மார்ச் 20 வரை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வி நிர்வாக சேவையின் முதல் தர அலுவலர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

Exit mobile version